Tamil கட்டுரை | வாழை மரம் பற்றிய கட்டுரை | Pothu Katturai for Primary Class

வாழை மரம் பற்றிய கட்டுரை


குறிப்புப் சட்டகம்

தோற்றம்

பயன்கள்

உணவும் சமையலும்

மருத்துவ குணம்

சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

தமிழர்களுக்குமான உறவு. வாழையடி வாழையாகத் தொடர்கிறது. மக்களுக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் வாழை மரத்தினைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

தோற்றம்:

வாழை மரத்திற்கு இலைகளே கிளைகள் ஆகும். வாழை மரம் "குலை" தள்ளிய பின் மரம் வீழ்ந்து விடும். பின்னர் அதன் கீழ் கன்றுகள் வளர்ந்து பயன்தரும்.

பயன்கள்:

வாழைப்பழம் முக்கனிகளுள்‌ ஒன்று. வழை மரத்தின் காய்,‌ பூ, தண்டு அனைத்தும் உணவாக பயன்படும். வாழை பழத்தில் மலை வாழை, கற்பூரவள்ளி, செவ்வாழை, பேயன் வாழை, என பலவகைகள் உண்டு.

உணவும் சமையலும்:

பல வெப்ப மண்டல நாடுகளில் வாழைப்பழம் முதன்மையான மாப்பொருள் உணவாகவும், வாழைப்பூ மற்றும் வாழைத் தண்டு காய்கறியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

பெரும்பாலும் வாழை இலைகள், சுற்றுச்சூழலை பாதிக்காத உணவுக் தட்டுக்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மருத்துவ குணம்

இலை, தண்டு, பூ, காய், பழம் என ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவப் பலன்களைப் பொதிந்து வைத்திருக்கும் அற்புதமான தாவரம் வாழை.

நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது வாழைப்பழம். இதில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்க உதவுவது வாழைத்தண்டு. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் திறன் உடையது வாழைப்பூ. 

வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். 

வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும்போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. வாழைப் பட்டையின் சாறு தீப்புண்ணை ஆற்ற மருந்தாக பயன்படும்.

சிறப்பு:

திருமணம், புதுமனை புகுவிழா, போன்ற மங்கல விழாக்களில் வாழை மரங்களை கட்டுவார்கள். 

முடிவுரை:

வாழை மரமானது தன் அனைத்து பாகங்களும் பிறருக்கு பயன்படும் வகையில் வாழ்வது போல மனிதர்களாகிய நாமும் பிறருக்கு பயன்படும் வகையில் வாழ வேண்டும்.


#கட்டுரை

#வாழ்க்கை_முறை

#pothu_katturai

#tamil_katturai

#tamil_essay

#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips

#essaywriting 

#favourite

#essay 

#essayforkids 

#easyessay

#kidsenglishessay

#கட்டுரை

#சிலவரிகள்கட்டுரை

#குழந்தைகளுக்கான_கட்டுரை

#வாழைமரம்

#வாழைமரம்பற்றியகட்டுரை

#வாழைமரம்பயன்கள்


tamil katturai , tamil essay , katturai , கட்டுரை , essay in tamil , tamil essay writing tips , வாழ்க்கை முறை , முன்னுரை எழுதுவது எப்படி , முடிவுரை எழுதுவது எப்படி , pothu katturai , pothu katturai in tamil , pothu katturaigal tamil , podhu katturai , pothu katturai tamil , வாழை மரம் பற்றிய கட்டுரை, வாழை மரம் பயன்கள் கட்டுரை, வாழை மரம் கட்டுரை, வாழை கட்டுரை






Comments