Tamil கட்டுரை | "காட்டின் வளமே நாட்டின் வளம்" | Pothu Katturai for Primary Class

 காட்டு வளமே நாட்டு வளம்

முன்னுரை

"காடு செழித்தால் நாடு செழிக்கும்"

என்ற வாக்கிற்கிணங்க விண்ணில் தவழ்ந்து செல்லும் கார்முகில் கூட்டத்தை மண்ணில் மழையாக பொழியச் செய்வன மரங்களே. நாடு செழிக்க காட்டுவளம் தேவை. காடுகளின் மகத்துவம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

காடுகளின் சிறப்புகள்:

காடுகளே நாட்டின் பாதுகாப்பாக விளங்குகின்றன. 

"காட்டு வளமே நாட்டு வளம்" 

"காடு அழிந்தால் நாடு அழியும்" என்பன காட்டின் சிறப்பை உணர்த்தும் பழமொழிகள் ஆகும். காடுகளே நாகரிகத்தின் பிறப்பிடம், இயற்கை எழிலின் இருப்பிடமாகும்.

பயன்கள்: 

 காடுகள் உயிர்வாழத் தேவையான தூயக் காற்றையும் நிழலையும் தருகிறது. நாட்டின் தட்பவெப்ப நிலையை சரிப்படுத்துகிறது. மண்ணரிப்பைத் தடுத்து நிலத்தின் ஈரத் தன்மையும் வளமும் வற்றாமல் காக்கின்றது. 

முடிவுரை:

காடுகளால் விளையும் பயன்களையும், அதனை அழிப்பதனால் விளையும் கேடுகளையும் மக்கள் உணர வேண்டும். வீட்டிற்கும் நாட்டிற்கும் பயன்படும் காடுகளை வளர்ப்போம். உயிரினங்களை அழியாமல் காப்போம். மழை வளம் பெறுவோம்.


Tags:

#கட்டுரை

#காடுகளைப்பாதுகாப்போம் 

#காட்டின்வளமேநாட்டின்வளம்

#pothu_katturai

#tamil_katturaiகாடுகளைப்பாதுகாப்போம் 

#tamil_katturaiகாட்டின்வளமேநாட்டின்வளம்

#tamil_essayகாடுகளைப்பாதுகாப்போம் 

#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips

#essaywriting 

#favourite

#essay 

#காட்டின்வளமேநாட்டின்வளம்essayforkids

#kidsதமிழ்essay

#கட்டுரை

#சிலவரிகள்கட்டுரை

#குழந்தைகளுக்கான_கட்டுரை

#tamil

Comments

Post a Comment