உறவுமுறை கடிதம் | வீரதீரச் செயல் புரிந்த நண்பனைப் பாராட்டி மடல் எழுதுக.

உறவுமுறை கடிதம்

வீரதீரச் செயல் புரிந்த நண்பனைப் பாராட்டி மடல் எழுதுக.

நாகர்கோயில், 
5.12.2021

பாசத்துக்குரிய நண்பனுக்கு,
நலம். உன் நலமும் தாய்தந்தையர் நலமும் அறிய ஆவல். உனது செயலால் நான் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளேன். சின்னஞ்சிறு வயதில் நீ செய்த பொதுத்தொண்டு பாராட்டுக்குரியது. பெருமளவில் பரவ இருந்த தீவிபத்தினை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து ஏழெட்டு நபர்களைக் காப்பாற்றியதும் பெருமைக்குரியது.

ஒவ்வொரு பத்திரிகையிலும் உனது பேட்டியைப் பார்க்க பெரு மகிழ்ச்சி ஏற்பட்டது. இளம்வயதில் கண் தானத்திற்காக எழுதிக் கொடுத்துள்ளமையும் பாராட்டுக்குரியது. உனது செயலால் உன் பெற்றோர் அகமகிழ்ந்து உள்ளனர். ஒவ்வொரு மாணவனும் உன்னைப் பின்பற்ற வேண்டும். வீரதீர செயல் புரிய வயது ஒரு தடை இல்லை என்பதனை நீ நிரூபித்து விட்டாய். முதலமைச்சரிடம் நீ விருது வாங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு, 
உன் உயிர் நண்பன்,
ராம்

உறைமேல் முகவரி
ஆகாஷ்,
567/9 தமிழ் தெரு,
நாகர்கோவில் 629001
கன்யாகுமரி மாவட்டம்

Subscribe to DaYs EyE Kids for more information

#tamilkaturai
#உறவுமுறைகடிதம்
#தமிழ்கடிதம்
#தமிழ்உறவுமுறைகடிதம்
#கடிதம்
#dayseyekids

Comments