கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் கவிதை எழுதுக,
1) பள்ளி
2) முயற்சி
பள்ளி
பள்ளி என்ற கலைக்கூடம் - நம்
வாழ்வைச் சிறப்பிக்கும் அன்றாடம்
சிலையாய் நம்மைச் செதுக்கும் - நல்ல
கலையாய் நம்மை ஆக்கும்
கேள்வி கேட்கும் ஞானம் - அங்குப்
பதிலைக் கொடுக்கத் தோன்றும்
வேற்றுமை அகற்றும் பந்தம் - நம்
ஒற்றுமை ஒன்றே சொந்தம்.
முயற்சி
முயற்சி மட்டும் இல்லையென்றால்
தளர்ச்சி என்றோ வாழ்வை வீத்தி இருக்கும்! அறிவியலின் ஆக்கமெல்லாம் முயற்சி தானே!
கருவிகளின் கண்டுபிடிப்பெல்லாம் முயற்சி தானே!
உறவுகளின் வளர்ச்சியெல்லாம் முயற்சி தானே!
வரவுகளின் வசந்தமெல்லாம் முயற்சி தானே!
முயற்சி செய்தால் மட்டும் முன்னேற்றம், அயற்சிக்கு இடம் தந்தால் பின்னேற்றம்!
Subscribe to DaYs EyE Kids YouTube channel for more information
#dayeyekids
#கவிதைஎழுதுதல்
#கவிதை
#பள்ளிகவிதை
#முயற்சிகவிதை
#கவிதைஎழுதுக
Comments
Post a Comment