ஐஸ்கிரீம் கடையில் ஒரு நாள்
நான் கடந்த வாரம் எனது பெற்றோருடன் ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றேன்.
நாங்கள் மேஜையில் உட்கார்ந்து கடையில்
என்னென்ன சுவைகள் கொண்ட ஐஸ்கிரீம் கிடைக்கும் என்று கேட்கப் பணியாளரை அழைத்தோம்.
அவர் வந்து என் பெற்றோரிடம் இருப்பதைக் கூறினார்.
எனக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீமின் சுவை என்ன என்று என் பெற்றோர் என்னிடம் கேட்டார்கள்.
நான் சொன்னேன், எனக்கு பிடித்தது சாக்லேட் ஐஸ்கிரீம் என்று.
என் பெற்றோர் ஒரு சாக்லேட் ஐஸ்கிரீமை பணியாளரிடம் கொண்டு வரச் சொன்னார்.
அவர் எனக்கு பிடித்த ஐஸ்கிரீமை எடுக்கச் சென்றார்.
ஒரு நிமிடத்திற்குள், நான் கேட்ட ஐஸ்கிரீமை என்னிடம் வந்து கொடுத்தார்.
எனக்கு பிடித்த சாக்லேட் ஐஸ்கிரீமை நான் சுவைக்க ஆரம்பித்தேன்.
எதிர்பாராமல், அது என் மடியில் விழுந்தது. பின்னர், நான் அழ ஆரம்பித்தேன்.
நான் மிகவும் சோகமாகிவிட்டேன், கீழே கொட்டி விட்டதே என்று.
என் பெற்றோர் என்னைப் பார்த்து சிரித்தனர். எனக்கு பிடித்த சாக்லேட் ஐஸ்கிரீம் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் இரண்டையும் சேர்த்துக் கொண்டு வர செய்தனர்.
என் கண்ணீர் புன்னகையாக மாறியது.
நான் அதை ருசித்து சாப்பிட்டு விட்டு வீடு சென்றோம்.
இறுதியில், மகிழ்ச்சியான நேரமாக மாறியது அந்நாள்.
Tags:
#கட்டுரை
#pothu_katturai
#tamil_katturai
#tamil_essay
#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips
#essaywriting
#favourite
#essay
#essayforkids
#easyessay
#kidstamilessay
#கட்டுரை
#சிலவரிகள்கட்டுரை
#குழந்தைகளுக்கான_கட்டுரை
#10linesessayforkids
#A_Day_at_the_Ice-cream_Shop_in_tamil
#icecreamshopintamil #spendingtimeinashopintamil
Comments
Post a Comment