என்னை கவர்ந்த கவிஞர்
முன்னுரை
எண்ணற்ற தமிழ் கவிஞர்களுள் என்னைக் கவர்ந்த இனிய கவிஞர், புரட்சி கவிஞர் பாரதிதாசன். தமிழ் தழைக்கவும், தமிழர் பெருமை நிலைக்கவும், தமிழ்நாடு செழிக்கவும், பாடல்கள் பாடிய இருபதாம் நூற்றாண்டு கவிஞர்களுள் இணையற்றவரான இவரின் அருமை பெருமைகளைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
வாழ்க்கைக் குறிப்பு
பாரதிதாசன் 29-04-1891 அன்று புதுவையில் பிறந்தார். பெற்றோர் கனகசபை இலக்குமி அம்மையார். இவர் பாரதியார் மீது கொண்ட பேரன்பால் சுப்புரத்தினம் என்ற தனது இயர்பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
தமிழுணர்வு
"தமிழெங்கள் உயிருக்கு நேர்", தமிழின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்" என்பன போன்ற கவிதை வரிகள் இவரது தமிழுணர்வைக் காட்டுகின்றன.
பெண்ணுரிமை
பாரதிதாசன், ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்றார். பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்றும் பாடியுள்ளார்.
முடிவுரை
பாரதிதாசன் ஊட்டிய உணர்வு கொண்டு காட்டிய நெறியினில் சென்றால், வீழும் தமிழ் இனி வாழும். நாளும் தமிழரின் நிலை உயரும். தாழ்ந்த தமிழகம் தலை நிமிரும்.
Tags:
#கட்டுரை
#வாழ்க்கை_முறை
#pothu_katturai
#tamil_katturai
#tamil_essay
#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips
#essaywriting
#favourite
#essay
#essayforkids
#easyessay
#kidsenglishessay
#கட்டுரை
#சிலவரிகள்கட்டுரை
#குழந்தைகளுக்கான_கட்டுரை
#என்னை_கவர்ந்த_கவிஞர்
Comments
Post a Comment