இரும்பு பெண்மணி J.Jayalalitha in Tamil | தமிழ் கட்டுரை| AIADMK | ஜெ ஜெயலலிதாவின் கதை

 


ஜெ. ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு:-

முன்னுரை

ஜெயலலிதா ஜெயராம் அவர்கள், தமிழக முதல்வரும், அ.தி.மு.க கட்சியின் தலைவரும் மற்றும் புகழ்பெற்ற முன்னால் தமிழ் நடிகையும் ஆவார். 

வாழ்க்கை வரலாறு

ஜெயலலிதா அவர்கள் 24-02-1948 அன்று ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூர் என்ற இடத்தில் பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது. ஜெயலலிதா என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமளவள்ளி. 

தொழில்

ஜெயலலிதா அவர்கள் தனது இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். குடும்ப நிதி கட்டுப்பாட்டின் காரணமாக, அவரது தாயார் அவரை திரையுலகில் நடிக்க வலியுறுத்தினார். 15 வயதில், அவர் ஒரு முன்னணி கதாநாயகனுடன் அறிமுகமானார். அதுவே அவருடைய புகழ்பெற்ற திரைப்பட தொழிலுக்கு ஆரம்பமாக இருந்தது. தொடக்கத்தில் சில தோல்விகளை சந்தித்த போதிலும் மனம் தளராமல் போராடி பிறகு அனைவர் மனதிலும் நீங்க இடம் பெற்றார். 

அரசியல்

தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள் ஒருவர் ஜெ.ஜெயலலிதா அவர்கள். அவர் மேல் பல குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் இருந்தாலும், அவர் மூன்று முறை (1991, 2001, 2011) மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

பங்களிப்புகள்

அரசாங்க நிதி மற்றும் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்தும் மோசடி, குற்றச்சாட்டுகள் மற்றும் பல சர்ச்சைகள் இருந்தாலும், மாநில மக்களின் மீது அவர் கொண்ட பற்றும், செலுத்திய பங்களிப்பும் அவரை மூன்று முறை ஆட்சிக்கு வர செய்தது. அவரது பதவிக்காலத்தில், அவர் மக்களின் நன்மைக்காக தீவிரமாக வேலை செய்தார்.

விருதுகள் 

சினிமாவிலும் அரசியலிலும் நீங்க இடம் பெற்ற ஜெ.ஜெயலலிதா அவர்கள் கலைமாமணி விருது, மற்றும் தங்க மங்கை போன்ற பல விருதுகளைப் பெற்று உள்ளார். இவரை 'இரும்பு பெண்மணி' என்றும் அழைக்கப்படுகிறது.

முடிவுரை

தமிழுக்கு பெருமை சேர்த்து, தமிழ் நாட்டின் பெயரை உலகுக்கே உரக்க சொல்லி அழியாப்புகழ்பெற்ற தலைவர்களுள் ஒருவரான ஜெ. ஜெயலலிதா அவர்கள் 05-12-2016 அன்று இயற்கை எய்தினார். இவரின் அழியா வாசகம் "மக்களால் நான் மக்களுக்காகவே நான்". 


Comments