Tamil கட்டுரை | விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் கட்டுரை | Pothu Katturai for Primary Class

 விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்


முன்னுரை:

விண்வெளியில் கால் பதித்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பு:
இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார்.

விண்வெளியில் தமிழரின் அறிவாற்றல்:

தமிழன் அறிவியல் முன்னோடி அறிவியல் தோன்றுவதற்கு முன்னரே தமிழன் அறிவியல் பற்றிய சிந்தனைகளை சிந்தித்துள்ளனர். அவற்றை சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன. பொறியியல் அறிவு, கட்டடவியல் அறிவு, மண்ணியல் அறிவு, கனிமவியல் அறிவு, மருத்துவ அறிவு பல்வேறு வகையான அறிவியல் பிரிவுகளை அன்றைய தமிழ் மக்கள் அறிந்து செயல்படுத்தி இருந்தனர்.

கல்பனா சாவ்லா:

1995-ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா, கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ் 87-இல் பயணம் செய்வதற்குத் தேர்வுச் செய்யப்பட்டார். முதல் இந்திய கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ் -87-இல் விண்வெளி பயணம் மேற்கொண்டார். இந்த விண்வெளி பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார்.

பின்னர் 2003-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ். 107-இல் அனுப்பி வைத்தனர். 16-நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பிப்ரவரி -1 ஆம் தேதி பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது அமெரிக்காவின் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உள்பட 7 பேரும் விண்வெளி வீரர்களும் பலியாகினர்.

விருதுகள்:

இவரது மறைவுக்கு பின் இவருக்கு அளிக்கப்பட்ட விருதுகள்:

1. அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor)
2. நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம்
(NASA Space Flight Medal)
3. நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal)

விண்வெளியில் வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை:

இன்றைய அறிவியல் உலகம் சுருங்கிவிட்டது. எந்த ஒரு மூலையில் நடக்கக்கூடிய எந்த ஒரு செய்தியையும் விரல்நுனியில் நாம் பார்க்க முடிகிறது. இயந்திர மனிதர்கள் மூலம் அறுவை மருத்துவமும் வேறு கடினமான வேலைகளையும் செய்து வருகிறோம். பூமியில் இருந்துகொண்டே வானத்தில் என்ன நடக்கின்றன என்பதை ஆராய்வதற்காக பல விண்கலங்களை வானத்தில் அனுப்ப வேண்டும்.

முடிவுரை :

அறிவியலை உலகிற்கு தந்தவன் தமிழன் அத்தகைய தமிழனாய் பிறந்து, அறிவியல் துறையில் எண்ணற்ற சாதனைகளை செய்ய நாம் முயற்சி செய்ய வேண்டும்.

#கட்டுரை
#வாழ்க்கை_முறை
#pothu_katturai
#tamil_katturai
#tamil_essay
#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips
#essaywriting 
#favourite
#essay 
#essayforkids 
#easyessay
#kidsenglishessay
#கட்டுரை
#சிலவரிகள்கட்டுரை
#குழந்தைகளுக்கான_கட்டுரை
#கல்பனாசாவ்லா
#kalpanachawla
#tamil

tamil katturai , tamil essay , katturai , கட்டுரை , essay in tamil , tamil essay writing tips , வாழ்க்கை முறை , முன்னுரை எழுதுவது எப்படி , முடிவுரை எழுதுவது எப்படி , pothu katturai , pothu katturai in tamil , pothu katturaigal tamil , podhu katturai , pothu katturai tamil , கல்பனா சாவ்லாவும் விண்வெளியும்,TENTH,TAMIL,10TH,POTHU KATTURAI,ESSAY,COMMON,KALPANA,KALPANA CHAWLA,KALPANA CHAVLAVUM VINVELIYUM,தமிழ்,பொதுக்கட்டுரை,பத்தாம் வகுப்பு,கல்பனா சாவ்லா,

Comments