நான் விரும்பும் கவிஞர்
குறிப்புச்சட்டகம்
* முன்னுரை
* பிறப்பும் இளமையும்
* இலக்கியப் படிப்பும் ஆசிரியர் பணியும்
* இலக்கியப்பணி
* படைப்புகள்
* முடிவுரை
முன்னுரை:
நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து தனது எளிய இனிய கவிதைகளால் தமிழ் கவிவுலகில் தனக்கெனத் தனியிடம் பிடித்து இத்தரணியில் புகழோடு வாழும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையே நான் விரும்பும் கவிஞர் ஆவார். அவரின் கவித்திறன் பற்றியும் தமிழ்ப்பணி பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும் இளமையும்:
கவிமணி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகருக்கு அருகிலுள்ள தேரூர் என்னும் சிற்றூரில் 1876 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 27 ஆம் நாள் சிவதாணுப்பிள்ளை, ஆதிலெட்சுமி இணையாருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். தனது ஆரம்ப படிப்பினைத் தேரூர் ஆரம்பப் பள்ளியிலும் பின்னர் கோட்டாறு அரசினர் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
இலக்கியப் படிப்பும் ஆசிரியர் பணியும்:
கவிமணியின் காலத்தில் நாகர்கோவில் பகுதி கேரளத்திற்கு உட்பட்டு இருந்தமையால் அவரின் பள்ளிப்படிப்பு முழுவதும் மலையாள மொழியிலேயே அமைந்திருந்தது. அவர் தனது ஆசிரியர் பயிற்சியினைத் திருவனந்தபுரம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முடித்தார்.
அவர் திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்புரானிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிமணி, தனது ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
பின்னர் கல்லூரி ஆசிரியராகவும் பணிபுரிந்து கிட்டத்தட்ட முப்பத்தி ஆறு வருட கண்ணியமான ஆசிரியர் பணிக்குப் பிறகு ஓய்வு பெற்றார். 1901 ஆம் ஆண்டு உமையம்மை என்பவரை மணந்தர்.
இலக்கியப் பணி:
'கவிதைகளால் புதிய உலகைப் படைக்கலாம்' என்ற கருத்துருவில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இந்திய விடுதலை தீயை மக்கள் மத்தியில் தனது கவிதைகளால் தூண்டியும் ஓசை நயமிக்க பாடல்களால் குழந்தைகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டும், சாதிய அடிமைத் தனையினைத் தனது வீரவரிகளால் உடைத்தும், பெண்ணடிமைக்கு எதிராய்த் தனது கவிதைகளில் புரட்சிக்கொடி தூக்கியும் கவிதையுலகில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நம் கவிமணி அவர்கள்.
உள்ளத் துள்ளது கவிதை - இன்பம் உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை
என்னும் இக்கவிதை இன்றளவும் கவிதைக்கான இலக்கணக் கவிதையாகத் தமிழலகில் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது மேலும்,
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்றது வெள்ளைப்பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
என்னும் கவிவரிகள் கவிஞரின் எளிய இனிய கவிதைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
படைப்புகள்:
கவிதை, கட்டுரை, உரைநடை, புதினம் எனத் தமிழ் இலக்கிய வகைகளில் இவரின் பங்கு பாராட்டுக்குரியது. அதிலும் இவரின் மொழிபெயர்ப்புப் படைப்பாகிய 'ஆசிய ஜோதி' இன்றளவும் பெருமைக்குரிய ஒன்றாகத் திகழ்கின்றது.
மேலும் பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களைத் தமிழ் சூழலுக்கேற்றார்போல் தழுவல் முறையில் மொழிப்பெயர்த்து வழங்கியது சிறப்பு.
இவரின் 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' நையாண்டிக்கும் முற்போக்குக்கும் நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. 'மலரும் மாலையும்' இவரின் அரிய கவிதைத் தொகுப்பாகும்.
முடிவுரை:
தனது இலக்கியப் படைப்புகளால் தமிழுக்குத் தொண்டாற்றி வந்த கவிமணி 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26-ஆம் நாள் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள புத்தேரி என்னும் ஊரில் நிலவுலகு நீத்தார். தமிழும் தமிழ் மொழியும் வாழும் வரை கவிமணியின் புகழும் வாழும், எந்நாளும் நிலைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
#கட்டுரை
#வாழ்க்கை_முறை
#pothu_katturai
#tamil_katturai
#tamil_essay
#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips
#essaywriting
#favourite
#essay
#essayforkids
#easyessay
#kidsenglishessay
#கட்டுரை
#சிலவரிகள்கட்டுரை
#குழந்தைகளுக்கான_கட்டுரை
#என்னை_கவர்ந்த_கவிஞர்
#கவிமணி_தேசிக_விநாயகம்_பிள்ளை
#நான்_விரும்பும்_கவிஞர்
tamil katturai , tamil essay , katturai , கட்டுரை , essay in tamil , tamil essay writing tips , வாழ்க்கை முறை , முன்னுரை எழுதுவது எப்படி , முடிவுரை எழுதுவது எப்படி , pothu katturai , pothu katturai in tamil , pothu katturaigal tamil , podhu katturai , pothu katturai tamil , General articles , articles , essay , katturai , tamil , கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கட்டுரை, நான் விரும்பும் கவிஞர் கட்டுரை
Comments
Post a Comment