முன்னுரை:
ஒவ்வொரு நாளும் நம் அன்றாட தேவைகளுக்காக சாலைவழியையே பயன்ப்படுத்துகின்றோம். அவற்றில் பயணிக்கும் போது நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாலைவழி பாதுகாப்பு என்பது சாலையைப் பயன்படுத்தும் ஒரு நபர் கடுமையாகக் காயப்படுவதையோ அல்லது பலியாவதையோ தடுக்கும் முறைகளையும் நடவடிக்கைகளையும் குறிக்கிறது.
சாலை பாதுகாப்பின் தேவை:
சாலை விபத்துக்கள் உலகின் மிகப்பெரிய பொதுநல பிரச்சனைகளாகவே உள்ளன. சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் விபத்திற்கு முன்பு மிகுந்த உடல்நலத்துடன் இருப்பார்கள். ஆனால் அவர்கள் திடிரென்று பலியாவதையோ அல்லது காயப்படுவதையோ யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்பிரச்சனை மிகவும் தலைவழியை தரக்கூடியது.
உலக சுகாதார அமைப்புபடி (WHO) வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளால் பல இலட்சம் மக்கள் கொல்லப்படுகின்றனர் என்றும் பல கோடி மக்கள் காயம் அடைகின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர். இவற்றில் இருந்து பாதுக்காக்கும் வழிமுறைகளைப் பற்றிய தேடல்களை இக்கட்டுரையில் காணலாம்.
சாலை விபத்திற்கான காரணங்கள்:
வாகனம் இயக்கும் போது ஏற்படும் கவனச்சிதறல், கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்களை இயக்குதல், இரவில் வாகனங்களை இயக்குதல், வாகனங்களுக்கிடையே இடைவெளி இல்லாதிருத்தல், போக்குவரத்து நெரிசல், சாலையின் நிலை, பாதுகாப்பு கலசங்களை தவிர்த்தல், பாதசாரிகளின் பொறுமை இன்மை, மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல், போக்குவரத்து குறியீடுகளை மதிக்காமல் இருத்தல், அதிவேகமாக இயக்குதல், ஆளில்லா இருப்புப்பாதை பகுதிகளில் கவனமில்லாது கடப்பது போன்ற செயல்களால் உயிர்ச்சேதம் அதிகரிக்கிறது. இதனால், பல குடும்பங்கள் வருமானம் ஈட்டும் தம் நபரை இழந்து வாடுகின்றன.
சாலைப் பாதுகாப்பு விதிகள்:
ஒவ்வொரு நாடும் அதன் குடிமக்களின் நலன்கருதி, சாலைப்போக்குவரத்து விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் வகுத்துள்ளது.
இந்திய சட்டப்படி, ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் வயது 18 ஆகும். வாகனம் இயக்கும்போது கைப்பேசி பயன்படுத்துவது, மருத்துவமனை அல்லது பள்ளிவளாகம் அருகில் வாகனங்கள் ஒலியெழுப்புவது, தரமான தலைக்கவசம் அணிவது, வளைவுகளில், திருப்பங்களில் முக்கியமாக மலைப்பிரதேசங்களில் வேகத்தை குறைத்தே இயக்குவது, வாகனங்கள் நிற்கும் இடங்களில் இடைவெளி விட்டு வாகனத்தை நிருத்துவது போன்ற பல விதிகள் நடைமுறையில் உள்ளது.
போக்குவரத்துக் குறியீடுகள்:
போக்குவரத்துக் குறியீடுகள், சாலைகளில் போக்குவரத்தை நடத்தும் சத்தமில்லா நடத்துநராகவே செயல்படுகின்றன.
'நில்', 'கவனி', 'செல்', வேகத்தடை, வலப்புறம் திரும்பு, இடப்புறம் திரும்பாதே போன்ற சில குறியீடுகள் கட்டாயக் குறியீடுகள் ஆகும். இவை நாம் சாலைகளில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவைகள் பற்றிய விதிகளாகும். இந்த குறியீடுகள் வட்ட வடிவில் காணப்படுகின்றன.
குறியீடுகள் ஓட்டுநருக்கு எச்சரிக்கை தருவதால், எச்சரிக்கை குறியீடுகள் ஆகின்றன. இவை சாலைகளின் சூழ்நிலைகள் குறித்த எச்சரிக்கைகளைச் சாலை பயன்பாட்டாளர்களுக்கு அறிவிப்பவை ஆகும். இந்த குறியீடுகள் முக்கோண வடிவத்தில் காணப்படுகின்றன.
மருத்துவமனை,பெட்ரோல் பங்க், இளைப்பாறும் இடம், வாகனம் நிறுத்துமிடம், நிறுத்தக்கூடாத இடம் போன்றவை தகவல்களைத் தருவதால் தகவல் குறியீடுகள் என்றழைக்கப்படுகின்றன.
இவற்றை எல்லாம் சரியாக கடைப்பிடித்தாலே விபத்துகளில் இருந்து அனைவரும் தப்பித்துக் கொள்ளலாம்.
சாலைப் பாதுகாப்பு வாரம்:
பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலைவிபத்துகளால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பு வாரம் தேசிய நிகழ்வாக நடத்தப்படுகிறது. இது ஆண்டுதோரும் அனுசரிக்கப்படுகிறது. இந்திய அரசாங்கம், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில், சாலைப்பாதுகாப்பு வாரத்தை அனுசரிக்கிறது.
பரிந்துரைகள்:
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் வாகனங்களை பயன்படுத்த வேண்டும். அதிகபட்ச வேகமாக 50கிமீ/மணிக்குமேல் செல்லாதபடி கண்காணிக்க வேண்டும். உலகில் நடக்கும் உண்மை நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறியோ, அல்லது காணொலி மூலமாகவோ விழிப்புணர்வை உடனுக்குடன் ஏற்படுத்துவது அவசியமானதாகும்.
முடிவுரை:
ஒவ்வொரு உயிர்களின் மதிப்பும் விலைமதிப்புள்ளவை. அவற்றை போற்றிப் பாதுக்காக்க வேண்டும். எனவே, நாம் சாலை பாதுகாப்பிற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடித்து நமது நாட்டையும் வீட்டையும் பாதுகாப்போம். இவற்றை தெளிவாக இவ்வாசகம் உணர்த்துகிறது,
"எச்சரிக்கையாகவும் அக்கறையாகவும் இருங்கள் விபத்துகளைக் குறைத்திடுங்கள்".
#கட்டுரை
#வாழ்க்கை_முறை
#pothu_katturai
#tamil_katturai
#tamil_essay
#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips
#essaywriting
#favourite
#essay
#essayforkids
#easyessay
#kidsenglishessay
#கட்டுரை
#சிலவரிகள்கட்டுரை
#குழந்தைகளுக்கான_கட்டுரை
#சாலைபாதுகாப்புகட்டுரை
#சாலைபாதுகாப்பு
#roadsafetyessayintamil
#tamil
சாலை பாதுகாப்பு கட்டுரை,
சாலை பாதுகாப்பு தமிழ் கட்டுரை,
சாலை பாதுகாப்பு essay,
Road safety essay in Tamil,
Tamil pothu katurai,
தமிழ் பொது கட்டுரை,
Subscribe to https://youtube.com/c/DaYsEyEKids
Comments
Post a Comment