Tamil கட்டுரை | கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை | Pothu Katturai

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

முன்னுரை:

"உள்ளத்து உள்ளது கவிதை இன்பம் உருவெடுப்பது கவிதை"

என்று கவிதைக்கு இலக்கணம் வகுத்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அவர் வகுத்த இலக்கியத்திற்கு ஏற்ப கவிதைகளைப் பாடி மகிழ்வித்தவர் இவர்.

பிறப்பும் கல்வியும்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அடுத்த தேரூரில் 1876 இல் சிவதாணுப்பிள்ளை ஆதிலெட்சுமி அம்மையார் தம்பதிக்கு தவப்புதல்வனாகத் தோன்றினார். தொடக்க நிலைக் கல்வியை தேரூரில் முடித்தார். பின் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். திருவாவடுதுறையில் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று கவிதை இயற்றும் ஆற்றல் பெற்றார்.

ஆற்றிய பணியும் தொண்டும்:

கவிமணி தம் 29 ஆம் வயதில் ஆசிரியர் பணியினை கோட்டாறு நடுநிலைப்பள்ளியில் மேற்கொண்டார் திருவனந்தபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

தமிழ் பணியில் ஈடுபட்டு கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார். அவரது கவிதைகளை மலரும் மாலையும் உடையது என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். மேலும் பல கவிதை, உரைநடை நூல்களையும் வெளியிட்டார்.

குழந்தைகளின் உள்ளம் மகிழும் வகையில் இனிய குழந்தை பாடல்கள் பல தந்தவர் கவிமணி அவர்கள்,

"தோட்டத்தில் மேயது வெள்ளைப்பசு அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி"

என்ற பாடல் இனிமையும் எளிமையும் உடையது ஆகும்.

முடிவுரை:

கவிமணி அவர்கள் 1954 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். அனைவரும் சுவைக்கும் வண்ணம் கவிதைகளப் படைத்து தமிழுக்குத் தொண்டு செய்த கவிமணி அவர்கள் நினைவைப் போற்றுவோம்.


Tags:
#கட்டுரை
#வாழ்க்கை_முறை
#pothu_katturai
#tamil_katturai
#tamil_essay
#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips
#essaywriting
#favourite
#essay
#essayforkids
#easyessay
#kidsenglishessay
#கட்டுரை
#சிலவரிகள்கட்டுரை
#குழந்தைகளுக்கான_கட்டுரை
#கவிமணிதேசிகவிநாயகம்பிள்ளை
#கவிமணிதேசிகவிநாயகம்பிள்ளைகட்டுரை
#தமிழ்கவிஞர்கள்கட்டுரை
#tamil

Subscribe to https://youtube.com/c/DaYsEyEKids

Comments