Tamil கட்டுரை | "காலம் பொன் போன்றது" கட்டுரை | Pothu Katturai

 காலம் பொன் போன்றது

முன்னுரை

காலம் கடவுளால் தரப்பட்ட அரிய கொடை. அதன் அருமை பெருமைகளை அறியாமல் வீணாக்குபவர்களே உலகில் பெரும்பாலானோர். காலத்தின் முக்கியத்துவம் என்ன, அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

காலத்தின் அருமை 

"காலம் பொன் போன்றது" என்பர். பொன்னைப்போல் மதிப்பு மிகுந்தது காலம். காலத்தின் அருமையை உணர்ந்தவர்கள் சாதனையாளர்கள். இவர்கள் கிடைக்கின்ற காலத்தை வீணாக்காமல் நல்ல முறையில் செலவழித்து வாழ்வில் வெற்றி பெறுகின்றனர்.

காலமும் கடமையும்

காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காது. இதனை "இளமையில் கல்" "பருவத்தை பயிர் செய்" எனப் பொருள் நிறைத்த அறிவுரைகள் தெளிவாக்கும். ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட வேலையை இவ்வளவு நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

முடிவுரை

காலத்தின் அருமையை உணர்ந்து கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப்போடாமல் இன்றே செய்து முடித்து வாழ்வில் வெற்றி பெறுவோம்.



Tags:

#கட்டுரை

#வாழ்க்கை_முறை

#pothu_katturai

#tamil_katturai

#tamil_essay

#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips

#essaywriting 

#favourite

#essay

#essayforkids 

#easyessay

#kidsenglishessay

#கட்டுரை

#சிலவரிகள்கட்டுரை

#குழந்தைகளுக்கான_கட்டுரை

#காலம்_பொன்_போன்றது

#காலம்_பொன்_போன்றது_கட்டுரை

#timeisgoldessayintamil

Comments